----தாயடி கண்ணே----

----தாயடி கண்ணே----

தேவதைகளின் தேவதையென்றும்
அழகிய ராட்ச்சசியென்றும்
மயிலென்றும் குயிலேன்றும்
நிலவென்றும் பலவேன்றும்
உன்போன்ற
காதலிக்கு கவி எழுதி
வற்றா தமிழுக்கு
வார்த்தை பஞ்சம்
வந்துவிட்டது..

உன்னைப்பாட
உள்ள தமிழில்
உவமை தேடி
உலர்ந்து போகிறேன்.

புதுபொலிவுற்ற வார்த்தைகளொன்றும்
புலப்படவில்லை.

சரி
வாலிப இதயத்தின்
வாசல் திறந்து
வாய்மைதனை
வாய் மொழிகிறேன்.

நீ
என்னை கருத்தரிக்காத
தாயடி கண்ணே...

என் தெய்வ சிலை  உன்
காலடி மண்ணே....

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?