---கசியும் ரத்தம்-----

---கசியும் ரத்தம்-----

கடைசி சொட்டு பால் வரை
காம்புகளில் இருந்து கரந்தாயிற்று.

அவிழ்த்துவிட்டதும்
வற்றிய மடியில்
பாலென்று எண்ணி
பச்சை ரத்தம் உறிஞ்சி குடித்துவிடுகிறது.
கன்றுகுட்டி...

வழக்கமாய் குரல் எழுப்புவதைப் போல்
வலியில் கத்துகிறது பசு
" அம்மா " " அம்மா " .........

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?