---அத்தனையும் என் ஆசைகள்----

---அத்தனையும் என் ஆசைகள்----

பருவகால பனிதுளிகளுக்கு
நிழற்குடையொன்று 
நிறுவ வேண்டும்.

பாலைவனத்தின் மையத்தில்
கூவி கூவி
குளிர்பானம் விற்க வேண்டும்.

அரும்பும் பூக்களை பறிக்கும் கைகளுக்கு
இரும்பு விலங்கிட வேண்டும்.

எறும்பும் ஈக்களும் மொய்த்துக் கொள்ள - முழு
கரும்பு வழங்கிட வேண்டும்.

ஆலவட்ட ஆலமர குயில்களுக்காக
ஆலாபனை பாட வேண்டும்.

நீள்வட்ட பாதையில் நின்று கொண்டு
நிலவில் குதிக்க வேண்டும்.

சொட்டு ரத்தம் குடித்து போக கொசுக்களுக்கு
விட்டு கொடுக்க வேண்டும்.

கால்கடுக்க நிற்கும் மரங்கள்
ஓய்வெடுக்க நாற்காலி நல்க வேண்டும்.

காணிக்கையாக அமுதசுரபி ஒன்றை
தேனீக்கு கொடுக்க வேண்டும்.

சாமி உடல்நலமாய் வாழ வேண்டி
பூமியில் யாகம் நடத்த வேண்டும்.

கொதிக்கும் சூரியனை கொஞ்சகாலம்
குளிர்சாதனப் பெட்டியில் அடைக்க வேண்டும்.

கூண்டில் கிளி வளர்ப்பவனை குற்றவாளியென
குண்டர் சட்டத்தில் பிடிக்க வேண்டும்.

விசபாம்புகளுக்கும் சுவைத்து குடிக்க
ரசஅமுதம் கொடுக்க வேண்டும்.

கசாப்பு கடைக்காரனை விண்வெளிக்கு
விசா கொடுத்து அனுப்ப வேண்டும்.

கொஞ்சம் இளைப்பாற எறும்புகளுக்கு
மஞ்சம் அமைக்க வேண்டும்.

பறவைகள் அந்திரத்தில் நடக்க வேண்டும்.
மனிதன் புவியில் பறக்க வேண்டும்.

நாய் நரிகளும் நமக்கும் இனி
பசியில்லா  நிலை வேண்டும்.

காய்கறிகளை நறுக்குவதும்
கொலை என்றே  கொள்ள வேண்டும்.

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?