என் எண்ணங்கள் சில

----என் எண்ணங்கள் சில---- 

உன் முயற்சிகள் தோல்வியடைந்தால்
அதற்க்கு நீ பொறுபேற்று கொள்வதைவிட்டு
சூழ்நிலை காரணங்களை
சாடுவது
சரியாகாது.
..................................................................................

வெற்றி கிடைத்தபின்

உறங்குபவனைவிட
வெற்றி கிடைக்கும் வரை
உறங்காதவனைத்தான்
நீ ஊக்கபடுத்த வேண்டும்.
..................................................................................

தன் வாழ்கை என்பது

அடுத்தவனின் நலனில்தான்
ஆரோக்கியமாடைகிறது
என வாழ்பவன்
மரணத்தை கடந்துவிடுகிறான்.
..................................................................................

எதார்த்தமாக வெற்றி கண்டவனுக்கு
என்றேனும் ஒரு தோல்வி வரக்கூடும்.
போராடி போராடி தோற்றவனுக்கு
நிச்சயம் ஒரு வெற்றி வந்தே தீரும்.

..................................................................................

உன் வருமானத்தில்

ஐம்பது சதவீதத்தை
எப்படி செலவிட வேண்டுமென
கணக்கிட்டு வை.
மீதி ஐம்பது சதவீதம்
உனக்கே தெரியாமல் செலவழிந்துவிடும்.
..................................................................................

நேற்றைய துன்பம் எண்ணி வருந்துகிறோம்.

வேடிக்கை என்னவென்றால்
நாளைய விளைச்சலுக்காக
வைத்திருக்கும்
இன்றைய விதைகளையும்
அது விழுங்கிவிடுகிறது.
..................................................................................

பிச்சை எடுக்கும் வலது கையை விட

இடது கை எவ்வளவோ பரவாயில்லை.
..................................................................................

கவிதையின் கடைசி வரியில் தான்

ஒரு கவிஞனின் கர்ப வலி
அதிகமடைகிறது...

---தமிழ்தாசன்--- 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?