----------குடியரசு தின வாழ்த்துக்கள்----------

----------குடியரசு தின வாழ்த்துக்கள்----------

காரு வண்டி நிக்கும்
கார வீட்டுக்குள்ள
யாருமில்ல ?

ஏறு உழுத
ஏழைக்கெல்லாம் ஒரு வேள
சோறுமில்ல

வெரலால ஓட்டு போட்டோமையா...
வெவரமில்லா கூட்டமையா...

வெலவாசி கூடிடுச்சான்னு ஒங்கள
என்னைக்கு கேட்டுருக்கோம்?

வெங்காயம் வாங்கத்தான் பேங்குல
லோனு போட்டுருக்கோம்.

வைரமுன்னு கரியெடுத்து
கண்ணுல காட்டுனீக
ஆயிரங்கோடி கடனுன்னு 
கணக்கு போட்டீக.....

ஊழல்வாதிக
ஒழுஞ்சுக்கத்தான் 
ஊருக்கு ஊர் பங்களா இருக்கு...

ஒழச்சு ஒழச்சு
ஓடா போனவன் ஒதுங்கத்தான்
ஓட்டு வீடு ஒண்ணுருக்கா?
ஒட்டுத்துணி தானிருக்கா?


இந்தியா நாளைக்கு
வல்லரசுன்னு சொல்றீக..
இன்னும் நாங்க
நடபாதயில தானய்யா
படுத்திருக்கோம்.


மெச்சு மாடில நின்னு கையசச்சு 
கச்சி கோடின்னு எங்க 
கோவணத்த கொண்டு போன
சாமிகளா 
கும்பிடுறோம்.

குடிச இல்லா மக்கள் சார்வாக 
குடியரசு தின வாழ்த்துக்கள்....

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?