காதலி

-----காதலி----

பால் ஒளி சிந்தும் பௌர்ணமி இருட்டில்
நிலாச் சோறு ஊட்டிவிட கேள்.

சின்ன கன்னங்களை இரு கைகளில் ஏந்தி
நெற்றியில் முத்தமிடு.

புடவை இடைவெளியில் புலப்படும்
சருமத்தை புசிப்பதை நிறுத்து.

காமத்து பால் இல்லாத
புது திருக்குறள் அவளேன வலியுறுத்து.

அவள் தின்னும் ஆப்பிளில்
ஒரு கடி தர சொல்.
உயிர் போகும் தருணங்களில்
அவள் மடி தர சொல்.

வெற்றிக்கு அவள் காரணமென
ஓடி வந்து கட்டி அரவணைத்து கொள்.

தோல்வி எனில் அவள் நிழலில்
கட்டில் இட்டு படுத்து கொள்.

அவள் அதரம் முத்தமிடும் கருவி என்று
கருதுவதை விட்டு
நிரந்தரமான ஒரு நித்திய சிரிப்பை
அவள் உதடுகளில் உட்கார வை.

பரிசாக அவள் கால்களுக்கு கொலுசிடுவதை விட
முழுசாக ஒரு சிறகு செய்து கொடு.

அவள் சுவடுகளை விட
சுதந்தரத்தை நேசி.

அவள் சோகம் எல்லாம் உனதாக்கி கொள்.
உன் இன்பமெல்லாம் அவளுக்கு கொடு.


அவள் உன் மகாராணி என்று அடிமை படுத்தாதே.
அவளும் ஜான்சி ராணி மறந்து விடாதே.

உலகில் எல்லோரையும் நேசிக்கும் உன்னோடு
சண்டையிட ஒருத்தி இருக்கிறாள்
உல்லாசபடு.

ஊரே உன்னை உதாசினபடுத்தும் போது
உன்னையும் நேசிக்க ஒரு ஜீவன் இருப்பதாய்
உரக்க சொல்.

உன் மன கவலைகளை
மதுபானம் அருந்தி மறந்துவிடலாம்.
நண்பரகளோடு கூடி சிரித்து பேசி
நினைவுகளை இழந்துவிடலாம்.

அவள் துயரங்களை துடைக்கும்
உற்சாக பானம்
உலகில் இன்னும்
உற்பத்தி செய்யப்படவில்லை.

நீ ரசித்த குழந்தைகளிலும்
அவளும் ஒருத்தி என கருது..
கொடுத்தே யாக வேண்டும் அவளுக்கு
இரண்டாம் தாய் எனும் விருது.

----தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?