சில சிசுக்களின் உயிர்

தெருவில் 
கவனிப்பாரற்று கிடக்கும்
ஒரு பெட்டை  நாய்
கருத்தரிதுள்ளது..
பழுத்த பூசனியாக
பருத்து இருக்கிறது கருப்பை.

பள்ளங்குழியாக
வற்றிகிடக்கிறது இரைப்பை.
ஐயகோ
உள்ளே
சில சிசுக்களின் உயிர்
சிதைந்து போகுமோ?

---தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?