----என் அறிவியல் தந்தைக்கு-----

----என் அறிவியல் தந்தைக்கு-----


கிலோமீட்டர் தூரம் பார்த்தல்
கிட்ட தட்ட
இலங்கை என்னவோ
நம் அண்டை நாடுதான்.

அங்கு
கிணறு வெட்ட வெட்ட
கிடைப்பது என்னவோ
தமிழன் மண்டை ஓடுதான்.

ஐயா!
எங்களை கனவுகள் காண சொன்னீர்கள்.
கண்மூடி கொஞ்சம் கனவு காண்பதற்குள்
மண்மூடி என் மறத்தமிழ் இனம்
மாய்க்கபட்டுவிட்டதே!

முழு தமிழ் இனத்தின் தலை கொய்யபட்ட பிறகு
முழங்கையில் முள்காயமென முழங்குவதோ?

துரோணர் பட்டம் நிலைக்க நம் துரோகிகளுக்கு
இலங்கையில் சொற்பொழிவு வழங்குவதோ?

இந்தியாவை நிமிர செய்துவிட்டு
தமிழை தலை குனியவைப்பதுவோ?

எம் சகோதரியை கற்பழித்தவனோடு
சம்மந்தம் பேசுவது சரிதானா?
மஞ்சலென எங்கள் முகங்களில்
நீங்கள் பூசியது கரிதானா?

அதிபர் பதவியில் இலங்கையில்
அமர்ந்திருப்பரென்ன
அண்ணல் காந்தியா?

அடியோடு நம் இனம் அழிக்கப்பட்டதை
அழுதபடி பார்த்தோமே!
அத்தனையும் வதந்தியா?

நம் தூய பெண்மணிகளை
துப்பாக்கி முனையில்
துயர் பட துயர் பட
துகிலுரித்தானே!
மறந்துவிட்டீர்களா?

துச்சமென
தூக்கியெறிய
நம் உடலென்ன
காலவதியான
மருந்து பெட்டிகளா?

அறிவியல் விந்தையே !
என் கவிதையின் கால்களை கொண்டு
அவனை உதைக்கிறேன்
கண்ணில் படவில்லையா ?

அன்பு தந்தையே !
உன் கால்களை கட்டிபிடித்து
நான் கதைக்கிறேன்
காதில் விழவில்லையா ?


----தமிழ்தாசன்----

(22  ஆம் தேதி ஜனவரி மாதம் 2012  திரு அப்துல் கலாம் அவர்கள் இலங்கைக்கு சென்று சொற்பொழிவு வழங்கியதற்காக என் கண்டன கவிதை இது)

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=vNlLNOHS8Y4

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?