---- கருவற்ற கவிதைகள் எழுதாதே ---
முற்போக்கு சிந்தனைகள்
மூளை பரப்பில்
முளைப்பதற்கு முன்நேரம்.
கற்கயிலாதோர்க்கு கல்வி நல்கிட
கவிதை எழுதிட
முற்படும் அந்நேரம்.
வற்றாத பேனா பிடித்து
வெற்று தாள்கள்
நிரம்பும் முன்னே.
ஒற்றை கேள்வி எனக்குள்
அங்குமிங்கும்
அலைந்திட கண்டேன்.
சற்றும் ஓய்வில்லா சிந்தைக்குள்ளே
வான் முட்டும் சலசலப்பை எழுப்பிய
கேள்வி இதுவே....
" அட கழுதைகள் பொதி சுமக்கிறது ?
உன் கவிதைகள் எதை சுமக்கிறது ? "
---- தமிழ்தாசன் ----
Comments
Post a Comment