என்ன கிழித்தாய்

என்ன கிழித்தாய்
என்னை தவிர?
தேதி தாள்கள் - உன்
கால் சட்டையின்
கழுத்தை பிடித்து கேட்க்கிறது
என்ன கிழித்தாய்
என்னை தவிர?

உன் லட்சிய குதிரைக்கு
கால்கள் முளைத்தும் - அதன்
நோக்கம் இன்னுமும்
நொண்டியை இருப்பதன்
காரணமென்ன ?

எந்த பக்கம்
உன் கிழக்கு?
எதுவரை
உன் இலக்கு?

சிகரங்களில் ஏறி
சிம்மாசனத்தில்
அமர்வாயா? இல்லை
சிகரெட் போல
சில நொடிகளில்
சின்னாபின்னம் ஆவாயா?

தர்மனாக இருந்தாலும்
தாயின் வயிற்றில்
தங்கி கொள்ள
பத்து மாதம்தான்.
நீ மட்டும்
வீட்டுக்குள் இன்னும்
எத்தனை நாட்கள்
விட்டில் பூச்சியாய்
விழுந்துகிடப்பாய்?


சுனாமி, சூறாவளி
புயல், புகம்பம்
அரங்கேரியபிறகும்
பூமி பத்திர படுத்திகொண்ட
புதையல் நீ என்று
புரியவில்லையா?

வெளியுலகம் சிலிர்த்திட
வெடித்து புறப்பட
வேண்டிய நேரம்
இது இல்லையா?

வீடு மட்டுமே உலகமல்ல
உலகமே உன் வீடுதான்
இதை
உணரும் வரை - நீ
உதவாக்கரை.

நினைவில்கொள் - நீ
விழுந்தால் விதையாக
எழுந்தால் விருட்சமாக

தோழனே
இனி.......... - நீ
மறித்தால் மகாத்மா

உலகில்
மறித்தாலும் மறிக்காது
உன் ஆத்மா........

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்