உலகம் கேட்கிறது - யார் நீ

உலகுக்கு
நீ யாரென
நிரூபிக்காமல்
தயவு செய்து செத்து விடாதே.

மலர் கொத்துகளோடு
மரண தேவதை
எப்போது வேண்டுமானாலும்
உன்னை எடுத்துக்கொள்ளலாம்.

உலகுக்கு
நீ யாரென
நிரூபிக்காமல்
தயவு செய்து செத்து விடாதே.

மானுட பிணம்
நாற்றம் வீசும்
இது இயல்பு.
மாண்ட பிறகும்
இனம் பேசும்
எழுது
புது மரபு..

எரிக்கும்போதும்
எலும்புகள்
எழுந்து நிற்குமாம்.
வாலிபம் முடியும் முன்னே
முதுகெலும்பு
வளைந்துபோவதேன்ன?

சாதிக்காமால்
சவபெட்டிக்குள் - என்
சடலம் வராது
சத்தியம் செய்.
பாதசுவடுகளற்ற
பாதையொன்றை
தேடி செல்லும்
புத்தியும் செய்.
மேற்கொள்கிற பயணம்
அதில்
மேதையாகாமல் இல்லை மரணம்
புது லட்சியம் செய்.
அதை நிச்சியம் செய்.

தலைவனை உருவாகியது போதும்
தலைமுறையை உருவாக்கு
தேய் பிறையை
முழு நிலவாக்கு
தேவையெனில்
தேகத்தை மேழுகாக்கு.

உன் பிறப்பின்
ரகசியம் அறிவாயா?
கோடி விந்தணுக்களின்
போராட்டத்தை
பிரதிபலிக்கும்
ஒரு விந்தணுவின்
பிரதிநிதிதான் நீ.

பின்வாங்கலாம?
பிழைதிருத்த வேண்டாமா?

இடியாப்ப சிக்கல் போல்
இந்தியாவில் உள்ளது
ஆயிரமாயிரம் பிரச்சனைகள்.
ஒன்றை கையிலெடு
புயலென மையலிடு.

கோபத்தால்
இமயத்தை
பிடுங்கியெறி.
கொள்கைக்காக
ரத்தத்தை
பீச்சியடி.

வானத்திற்கு குடை பிடி
மேகத்தின் தாகம் தீர்த்து வை
காற்றுக்கு உருவமிடு
மரங்களுக்கு நிழல் கொடு
குயிலுக்காக நீ பாடு
குனிதவரெல்லாம்
நிமிர போராடு.

உனக்கென
செய்துகொள்வதை விட
மற்றவருக்காக
செலவிடுவதுதான்
வாழ்க்கை.

விரிசல் நிலங்களுக்கு
வியர்வையால்
நீர் பாய்ச்சு - இனி
விடிய விடிய
உன் பேச்சு.

பிறருக்காக
கண்ணீர் சிந்து
பிறகு பார்
பிரச்சனைகள் உனக்கு
கால்பந்து.

தீர்மானி
கருவறைக்கும் கல்லறைக்கும்
இடையே
வகுப்பறையா
கழிப்பறையா
உன் வாழ்க்கை
நீயே தீர்மானி.

சுண்டுவிரல் தொடுதளுக்கே
சுருங்கி போகும்
தொட்டசினுங்கியா
இல்லை
சுயநலவாதிகளை
சுட்டுத்தள்ள
பிறந்த பீரங்கியா
முடிவு செய்.

பூமிக்கு ஒரு நிலவுபோல்
உனக்கு ஒரு இழவு.
அழுகையும் சிரிப்பையும் போல்
அடிகடி நிகழ்வதில்லை
உன் மரணம்.
ஒருமுறைதான்
ஒரே ஒருமுறைதான்
வருகிறது
வாழ்வும் சாவும்.

மலர் கொத்துகளோடு
மரண தேவதை
எப்போது வேண்டுமானாலும்
உன்னை எடுத்துக்கொள்ளலாம்.

உலகுக்கு
நீ யாரென
நிரூபிக்காமல்
தயவு செய்து செத்து விடாதே.


              தன்னம்பிக்கயுடன்
...................தமிழ் தாசன்..................

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்