ஆறும் ஊரும் பேரும்
பவானி ஆறு காவிரி ஆற்றோடு சேருமிடத்தில் அமைந்த ஊரின் பெயரும் பவானி என்றே அழைக்கப்படுகிறது.
நொய்யல் ஆறு காவிரி ஆற்றோடு சேருமிடத்தில் அமைந்த ஊரின் பெயரும் நொய்யல் என்றே அழைக்கப்படுகிறது.
பேராற்றோடு கூடும் துணையாறு அல்லது சிற்றாறின் பெயரே ஊருக்கு வழங்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காவிரியோடு ஒப்பிடுகையில் பவானியும், நொய்யலும் சிறிய ஆறுகள் என கருதலாம். காவிரியின் துணையாறுகள் இவை.
அடையாறு என்னும் கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் அடையாறு என்றே அழைக்கப்படுகிறது.
அரசலாறு என்னும் கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் அரசலாறு என்றே அழைக்கப்படுகிறது.
வைப்பாறு என்னும் கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் வைப்பாறு என்றே அழைக்கப்படுகிறது.
வேம்பாறு என்னும் கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் வேம்பாறு என்றே அழைக்கப்படுகிறது.
கேரளத்தில் கடலுண்டி ஆறு கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் கடலுண்டி என்றும், மய்யாழி ஆறு கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் மாயி (மாஹி) என்றும் அழைக்கப்பட்டுகிறது.
ஆரணியாறு என்னும் ஆறு பாயும் கரையில் அமைந்து ஊருக்கு ஆரணி என்றே பெயர் வழங்கப்பட்டுள்ளது.
செய்யாறு என்னும் ஆறு பாயும் கரையில் அமைந்து ஊருக்கு செய்யாறு என்றே பெயர் வழங்கப்பட்டுள்ளது.
செஞ்சியாறு என்னும் ஆறு பாயும் கரையில் அமைந்து ஊருக்கு செஞ்சி என்றே பெயர் வழங்கப்பட்டுள்ளது.
பழையாறு என்னும் ஆறு பாயும் கரையில் அமைந்து ஊருக்கு கோட்டாறு என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. பழையாறு ஆற்றின் ஆதிப்பெயர் கோட்டாறு என்று இருந்திருக்கலாம்.
கேரளத்தில் சாலியாற்றின் கரையில் அமைந்த ஊருக்கு பெயர் சாலியாறு என்று வழங்கப்படுகிறது.
கல்லடா ஆற்றின் கரையில் அமைந்த ஊருக்கு கல்லடா என்று பெயர் வழங்கப்படுகிறது.
பெரும்பா ஆற்றின் கரையில் அமைந்த ஊருக்கு பெரும்பா என்று பெயர் வழங்கப்படுகிறது.
நெய்யாறு கரையில் அமைந்த ஊருக்கு பெயர் நெய்யாற்றிங்கரை என்று கேரளத்தில் வழங்கப்படுகிறது. நெய்யாறு கடலில் கலக்குமிடத்தில் கடற்கரை சோலைகளான அலையாத்திகாடுகள் சூழ்ந்த ஊரின் பெயர் பூவாறு என்று அழைக்கப்படுகிறது. நெய்யாறு கடலில் கலக்கும் இடத்திற்கு பெயர் பொழி என அழைக்கப்படுகிறது. நெய்யாறு கடலில் கலக்கும் மேற்குகரையில் பூவாறும், கிழக்கு கரையில் பொழியூரும் அமைந்துள்ளது.
அமராவதி ஆறு தோன்றும் இடத்தில் அமராவதி என்னும் பெயரில் ஊர் உள்ளது.
கொட்டக்குடி ஆறு தோன்றும் இடத்தில் கொட்டக்குடி என்னும் பெயரில் ஊர் உள்ளது.
கோதையாறு ஆறு தோன்றும் இடத்தில் கோதையாறு என்னும் பெயரில் ஊர் உள்ளது.
மோயாறு என்னும் ஆறு தோன்றும் இடத்தில் மோயாறு என்னும் பெயரில் ஊர் உள்ளது.
சிறுவானி என்னும் ஆறு தோன்றும் இடத்தில் சிறுவானி என்னும் பெயரில் ஊர் உள்ளது.
காவிரியும் கொள்ளிடமும் இணையும் இடத்தில் கல்லணை அருகே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஊரின் பெயர் இடையாற்று மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
ஆற்காடு அருகே இரண்டாக பிரியும் தென்பெண்ணையாறு மீண்டும் பையூர் அருகே ஒன்று சேர்கிறது. தென்பெண்ணை ஆறு இரண்டாக பிரியும் இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் உள்ள ஊரின் பெயர் இடையாறு என்று அழைக்கப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் இடையாறு என்னும் ஊரில் பிரியும் கிளையாறு ஒன்று கெடிலம் ஆற்றில் சென்று கலக்கிறது. தென்பெண்ணையாற்றுக்கும் கெடிலம் ஆற்றிற்க்கும் இடையில் ஓடும் ஆறு என்பதால் இடையாறு என்று பெயர் வந்திருக்க வேண்டும். தென்பெண்ணை - கெடிலம் இரண்டுக்கும் இடையில் ஓடும் ஆறு மலட்டாறு என்று அழைக்கப்படுகிறது.
கேரளா மாநிலம், மலப்புரம் மாவாட்டம் மேலாத்தூர் அருகே ஓலியாறு வெள்ளியாறு கூடுமிடத்தில் உள்ள ஊரின் பெயர் இடையாற்றூர் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆறுகளும் இணைந்து கடலுண்டிபுழா என்னும் பெயரில் பயணித்து அரபிக்கடலில் கலக்கிறது. கடலுண்டிப்புழா கடலில் கலக்குமிடத்தில் அமைந்து ஊரின் பெயர் கடலுண்டி என்று அழைக்கப்படுகிறது.
தாமிரபரணி ராமநதி, கடனாநதி ஆகிய மூன்று ஆறுகள் கூடுமித்திற்கு முக்கூடல் என்று பெயர் வழங்கப்படுகிறது.
பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடத்திற்கு திருமுக்கூடல் என்று பெயர் வழங்கப்படுகிறது.
பவானியும் காவிரியும் கூடமிடத்திற்கு கூடுதுறை என்று பெயர் வழங்கப்படுகிறது.
வைகையாறும், வராகநதியும் கூடமிடத்திற்கு கூட்டாத்து என்று பெயர் வழங்கப்படுகிறது. அதே போல வைகையாறும் மஞ்சளாறும் கூடுமிடத்திற்கும் கூட்டாத்து என்று பெயர் வழங்கப்படுகிறது.
முதிரப்புழா, நல்லத்தண்ணி ஆறு, குண்டலியாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடமிடத்தில் உள்ள ஊரின் பெயர் மூணாறு என்று அழைக்கப்படுகிறது.
கோதையாறு (கொத்தமங்கலம் ஆறு), காளியாறு, மற்றும் தொடுபுழா ஆறு ஆகிய மூன்று முக்கிய ஆறுகள் ஒன்றாக கூடுகின்ற இடத்தில் அமைந்துள்ள ஊரின் பெயர் மூவாற்றுப்புழா என்று கேரளத்தில் அழைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறும், பரளியாறும் கூடுமிடத்தில் இருந்து குழித்துறையாறு என்னும் தாமிரபரனி என்றும் புதிய பெயர் பெறுகிறது. ஆக இரண்டு ஆறுகள் சேர்ந்து மூன்றாவது ஒரு ஆற்றை தோற்றுவிக்கிறது என்பதால் அவ்விடத்திற்கு மூவாற்றுமுகம் என்று பெயர் வழங்கப்படுகிறது. பரளியாற்றுடன் சிறு ஒடை வந்து சேறும் இடத்திற்கு வலியாற்றுமுகம் என்று பெயர் வழங்கப்படுகிறது.
Comments
Post a Comment