Posts
Showing posts from September, 2026
ஆறும் ஊரும் பேரும்
- Get link
- X
- Other Apps
பவானி ஆறு காவிரி ஆற்றோடு சேருமிடத்தில் அமைந்த ஊரின் பெயரும் பவானி என்றே அழைக்கப்படுகிறது. நொய்யல் ஆறு காவிரி ஆற்றோடு சேருமிடத்தில் அமைந்த ஊரின் பெயரும் நொய்யல் என்றே அழைக்கப்படுகிறது. பேராற்றோடு கூடும் துணையாறு அல்லது சிற்றாறின் பெயரே ஊருக்கு வழங்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காவிரியோடு ஒப்பிடுகையில் பவானியும், நொய்யலும் சிறிய ஆறுகள் என கருதலாம். காவிரியின் துணையாறுகள் இவை. அடையாறு என்னும் கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் அடையாறு என்றே அழைக்கப்படுகிறது. அரசலாறு என்னும் கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் அரசலாறு என்றே அழைக்கப்படுகிறது. வைப்பாறு என்னும் கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் வைப்பாறு என்றே அழைக்கப்படுகிறது. வேம்பாறு என்னும் கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் வேம்பாறு என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் கடலுண்டி ஆறு கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் கடலுண்டி என்றும், மய்யாழி ஆறு கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் மாயி (மாஹி) என்றும் அழைக்கப்பட்டுகிறது. ஆரணியாறு என்னும் ஆறு பாயும் கரையில் அமைந்து ஊருக்கு ஆரணி என...