Posts

Showing posts from October, 2026

கிருதுமால்

Image
  Koothiyarkundu Canal

காடுப் பெருவெளி

  காட்டுப் பெருவெளி: குறைந்த மற்றும் நிலையற்ற மழைப்பொழிவு, கரடுமுரடான நிலப்பரப்பு, மோசமான வடிநில நீர்பரப்பு அல்லது மிக அதிகமான வெப்பநிலை, மண்ணின் தன்மை போன்ற இயற்கைக் காரணங்களால் பயிர்ச் சாகுபடிக்கு ஏற்றதாக இல்லாத நிலப்பகுதிகள் காட்டுப் பெருவெளி நிலங்கள் (Rangelands) எனப்படுகின்றன. சுதந்திரமாக மேயும் உள்ளூர் மற்றும் வீட்டு கால்நடை விலங்கௌகளுக்குத் தீவன ஆதாரமாக விளங்குவதுடன், மரப் பொருட்கள், நீர் மற்றும் காட்டுயிர்களுக்கு வாழிடமாகவும் திகழ்கின்றன. இப்பகுதிகள் பாரம்பரியமாக கால்நடை மேய்த்தல் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழிலுக்குப் உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வறண்ட பகுதிகளில் காணப்படும் காட்டுப் பெருவெளி நிலங்கள் (Rangelands) பொதுவாகத் தீவிரமான காலநிலை மாற்றங்கள், குறைந்த அளவிலும் சீரற்ற முறையிலும் பெய்யும் மழைப்பொழிவு, அதிக மாறுபாடுகளைக் கொண்ட மண் வகைகள், மண்ணில் அடிக்கடி காணப்படும் உப்புத்தன்மை, பல்வேறு நிலத்தோற்றங்கள் மற்றும் பொதுவாகக் குறைவான தாவரப் போர்வை ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளன. இத்தகைய தாழ்நிலப் பகுதிகளில் புற்கள், புதர்கள், சிறு புதர்ச்செடிகள், சிறிய மரங்கள் மற்ற...