சுதந்திர தினம் கிடையாது

லத்தி தழும்புகள்
உடம்பெங்கும்
நெத்தியில் குண்டுகள்
அங்கிங்கும்

பெண்ணின் சேலையுருவிய
கதையுண்டு
மண்ணின் மானம் காத்திட
சிதையுண்டு

ஒரு அணியின் திரளாய்
வெடி அதிர்வின் குரலாய்
வெளியேற்றிவிட்டோம் வெள்ளையனை.....

விரட்டித்தான் பார்க்கிறோம்
விடுதில்லையே!
நூல்றாட்டை இழந்த பின்னும்
நூற்றாண்டை கடந்து இன்னும்  
தேகம் தாண்ட மறுக்கிறது
தேசிய குணமாய் இருக்கிறது
எங்கள் அடிமைத்தனம்....... 

இந்த மண்ணில் வாழும்
சொந்த குடிகள்  யாவும்
உரிமைதனை அடையும் வரை
அடிமைத்தளை உடையும் வரை
விடுதலை போராட்டம் முடியாது...
எங்களுக்கு சுதந்திர தினம் கிடையாது

---- தமிழ்தாசன்----


Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்