மதுரை மாவட்ட பாறை ஓவியங்கள் குகைத்தளங்கள்
மூவாயிரமாண்டுகளாக இயங்கி வரும் உலகின் தொன்மையான நகரமான மதுரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் வரலாற்று சின்னங்கள் இருக்கின்றன. உலகமயம், நகர விரிவாக்கம், பாசன விரிவாக்கம், காரணமாக பல வரலாற்று சின்னங்கள் சிதைந்தும் அழிந்தும் வருகின்றன. மதுரை மாவட்டத்தில் காணப்படும் தமிழிக் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், குடைவரைக் கோயில்கள், நாயக்கர் மகால் உள்ளிட்ட 26 இடங்களை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து, இந்திய மற்றும் தமிழ்நாடு தொல்லியல்துறை பாதுகாத்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களை மேம்படுத்தும் வகையில் படிக்கட்டுகள், பயணிகள் அமர கல் பலகை, பூங்கா, இருமொழியில் அறிவிப்பு & தகவல் பதாகை, தொல்லியல் சின்னங்களை சுற்றி வேலி, அவ்விடத்தை பாதுகாக்க பாதுகாவலர் நியமனம் என சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொல்லியல்துறையின் பணிகள் பாராட்டுக்குரியவை.
மதுரை மாவட்டத்தில் பாறை ஓவியங்கள் அமைவிடங்களின் நிலை (2024) |
|||||||||||
வ. எண் |
மலையின் பெயர் |
கிராம பஞ்சாயத்து |
அச்சு தூரங்கள் (GPS) |
தகவல் பலகை |
தகவல் பலகையில் பாறை ஓவியங்கள் பற்றிய குறிப்பு |
பாதுகாப்பு வேலி |
மலைக் குன்றுக்கு செல்லும் சாலை |
மலைக்கு செல்லும் படிக்கட்டு |
கழிவறை |
பாதுகாக்கப்பட்ட வரலாற்று & தொல்லியல் சின்னம் |
அரசின் துறைகள் |
1 |
சமணர் மலை |
கீழக்குயில்குடி |
9.922147,
78.048629 |
ü |
X |
X |
ü |
ü |
X |
ü |
இந்திய தொல்லியல்துறை (ASI) |
2 |
பஞ்ச பாண்டவர் மலை |
கொங்கர் புளியங்குளம் |
9.946162,
77.988275 |
ü |
X |
X |
X |
ü |
X |
ü |
தமிழ்நாடு தொல்லியல்துறை (TNARCH) |
3 |
பெருமாள் மலை |
முத்துப்பட்டி |
9.930879,
78.023240 |
ü |
X |
X |
X |
ü |
X |
ü |
இந்திய தொல்லியல்துறை (ASI) |
4 |
அழகர் மலை |
கிடாரிப்பட்டி |
10.080939,
78.237694 |
ü |
X |
X |
X |
X |
X |
ü |
இந்திய தொல்லியல்துறை (ASI) |
5 |
ஓவாமலை |
திருவாதவூர் |
9.945401,
78.302567 |
ü |
X |
X |
X |
ü |
X |
ü |
தமிழ்நாடு தொல்லியல்துறை (TNARCH) |
6 |
சித்தர்மலை |
கல்யாணிப்பட்டி |
10.074413,
77.845125 |
ü |
X |
X |
ü |
ü |
X |
ü |
இந்திய தொல்லியல்துறை (ASI) |
7 |
உண்டாங்கல் |
நடுமுதலைக்குளம் |
9.989979,
77.935081 |
ü |
X |
ü |
X |
ü |
ü |
ü |
தமிழ்நாடு தொல்லியல்துறை (TNARCH) |
8 |
பஞ்ச பாண்டவர் மலை |
கருங்காலக்குடி |
10.156207,
78.368807 |
ü |
X |
X |
ü |
ü |
X |
ü |
தமிழ்நாடு தொல்லியல்துறை (TNARCH) |
9 |
பஞ்ச பாண்டவர் மலை |
கீழவளவு |
10.062263,
78.397703 |
ü |
X |
X |
ü |
ü |
X |
ü |
இந்திய தொல்லியல்துறை (ASI) |
10 |
மூன்று மலை |
வகுரணி |
9.892735,
77.810846 |
X |
X |
X |
|
X |
X |
X |
தமிழ்நாடு வருவாய்த்துறை |
11 |
புத்தூர்மலை |
மலைப்பட்டி |
9.927392,
77.817106 |
X |
X |
X |
ü |
X |
X |
X |
தமிழ்நாடு வருவாய்த்துறை |
12 |
தேவன்குறிச்சி |
தே. கல்லுப்பட்டி |
9.725163,
77.836453 |
X |
X |
X |
ü |
X |
X |
X |
தமிழ்நாடு வருவாய்த்துறை |
13 |
கிழவிகுளம்மலை |
பூசாரிபட்டி |
10.001391,
78.2337124 |
X |
X |
X |
ü |
NA |
X |
X |
தமிழ்நாடு வருவாய்த்துறை |
14 |
புலிமலை |
புலிப்பட்டி |
10.089230,
78.282870 |
X |
X |
X |
X |
X |
X |
X |
தமிழ்நாடு வருவாய்த்துறை |
15 |
வாசிமலை |
தொட்டப்ப நாயக்கனூர் |
9.949022,
77.708664 |
X |
X |
X |
X |
X |
X |
ப.வனப்பகுதி (RF) |
தமிழ்நாடு வனத்துறை |
16 |
கௌரி மலை |
பேரையூர் |
9.732350,
77.780832 |
X |
X |
X |
ü |
ü |
X |
X |
தமிழ்நாடு வருவாய்த்துறை |
பாறை ஓவியங்கள் தளங்கள் நேரடியாக ஆய்வு செய்து மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையை சேர்ந்த தமிழ்தாசன் அவர்களால் மேலுள்ள விவரம் தயாரிக்கப்பட்டது. |
வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் தொல்லியல்
சின்னங்கள் பாதுகாப்பில் நாம் செல்ல வேண்டிய தூரம் நெடியது என்றாலும் அண்மைக்கால தமிழ்நாடு
அரசு தொல்லியல்துறையின் பணிகள் பெரும் நம்பிக்கை அளிக்க கூடியதாக இருக்கிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் அண்மைக்
காலம் வரையிலான பாறை ஓவியங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. பாறை ஓவியங்கள் காணப்படும்
இடங்கள் குறித்த விவரங்களை மேலே அட்டவணையில் கொடுத்துள்ளோம். சாலை வசதி, மலையேற படிக்கட்டு வசதி, தகவல் பலகையில்
பாறை ஓவியம் பற்றிய குறிப்புகள் இல்லாமை, கழிவறை வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள்
நிலை குறித்து மேலுள்ள அட்டவணை விவரிக்கிறது. பார்க்கவும்.
பாறை ஓவியங்கள் ஓர் பாதுகாக்கப்பட வேண்டிய
தொல்லியல் சின்னம் என்கிற புரிதல் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. பாறை ஓவியங்கள்
மானுட சமூகத்தின் வரலாற்று பொக்கிஷங்கள் என்பதை உணர்த்தும் வகையில் அரசின் சார்பில்
பாறை ஓவியங்கள் பற்றி அறிவிப்பு பலகைகள் வைக்கபட வேண்டும். மதுரையில் இந்திய மற்றும்
தமிழ்நாடு தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னங்கள் என்று அறிவிக்கப்பட்ட
ஒன்பது மலைக்குன்றுகளில் அரசின் சார்பில் அறிவிப்பு மற்றும் தகவல் பலகை மதுரையில் வைக்கப்பட்டுள்ளது.
அதில் அந்த இடத்தில் காணப்படும் தமிழிக் கல்வெட்டுகள், வட்டெழுத்துக் கல்வெட்டு, சமணர்
பள்ளி, சிற்பம், குடைவரை கோயில்கள் உள்ளிட்டவைகள் குறித்த வரலாற்று குறிப்புகள் இடம்
பெறுகின்றன. அவ்வாறு வைக்கப்பட்ட தகவல் பலகையில் ஒரு மலைக்குன்றில் கூட பாறை ஓவியங்கள்
குறித்த தகவலோ, குறிப்புகளோ வைக்கப்படவில்லை. இதனால் வரலாற்று நினைவு சின்னமான பாறை
ஓவியங்கள் மீது கிறுக்குவது, எழுதுவது, வரைவது என சேத்துப்படுத்தும் வேலையை தெரிந்தோ
தெரியாமலோ மக்கள் சிலர் செய்து விடுகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படும் 16 மலைக்குன்றுகளில் 9 மலைக்குன்றுகள்
தொல்லியல்துறையின் கீழ் பாதுகாப்படுகிறது. இந்திய தொல்லியல்துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட
வரலாற்று தளமாக உள்ள அழகர்மலை சமணர் குகைத்தளத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் முற்றிலும்
சிதையும் நிலையில் உள்ளது. அரசால் பாதுகாக்கப்பட்ட இடங்களில் உள்ள பாறை ஓவியங்களின்
நிலையே அழியும் நிலையில் உள்ளது. இவை போக வருவாய்துறையின் கீழ் உள்ள 6 மலைக்குன்றுகளில்
காணப்படும் பாறை ஓவியங்கள் எவ்வித பாதுகாப்புமின்றி சிதையும் நிலையில் உள்ளது. ஒரு
மலைக்குன்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கிறது. எனவே பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ள தளங்களில்
அரசின் சார்பில் தகவல் மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மேலே அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடங்களில்
மூன்றுமலை, புத்தூர்மலை, தேவக்குறிச்சி மலை, கிழவிகுளம்மலை, புலிமலை, கௌரிமலை ஆகிய
ஆறு மலைக்குன்றுகளில் உள்ள பாறை ஓவியங்கள் வருவாய்துறையின் கீழ் எவ்வித பாதுகாப்புமின்றி
சேதமடைந்து வருகின்றன. இந்த ஆறு மலைக்குன்றுகளில் உள்ள பாறை ஓவியங்களை ''தமிழ்நாடு
தொன்மை மற்றும் வரலாற்று சின்னங்கள், தொல்லியல் தளங்கள், எச்சங்கள் பாதுகாப்பு சட்டம்
1966இன்'' (The Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological
Sites and Remains Act, 1966 ) கீழ் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து
தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Comments
Post a Comment