துணைக்கோள் நகரம் என்னும் துயரம்
மதுரை மாவட்டத்தில், தற்போது பெருகி வரும் வீட்டு வசதித் தேவை யைக், கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையத்திற்கு அருகில் மதுரை திருநெல்வேலி நான்கு வழிப் பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் ஒன்று உருவாக்கப் படும் என 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விதி எண் 110 இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும். இதில், 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த புதிய துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளான, சாலைகள், குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், மழை நீர் சேகரிப்பு திட்டம் மற்றும் பூங்காக்கள் ஆகியவைகள் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்தத் துணைக்கோள் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்.
உச்சப்பட்டியில் தேர்வான இடம் விளைநிலமெனக்கூறி அப்பகுதி மக்கள் துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், கடந்த 1994ல் வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலங்கள் அப்போதைய விலை நிலவரப்படி பெறப்பட்டது. ஆனால் தற்போது நிலங்களின் மதிப்புப்படி பணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரி வந்தனர். 1994ல் நிலத்தினை கையகப்படுத்தியதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அப்பகுதி விவசாயிகள் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
தோப்பூரில் ஒரு சென்ட்டுக்கு ரூ.2,500, உச்சப்பட்டியில் ரூ.870 பணம் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதென அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

Comments
Post a Comment