மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டு காட்டும் மதநல்லிணக்கம்
இசுலாமிய ஆவணப்படம் வேலையாக 23.04.2025 அன்று மதுரை முனிசாலை பள்ளிவாசல் சென்று இருந்தோம். இந்திய விடுதலை போராட்ட தியாகி மறைந்த மவுலானா சாகிப் அவர்களின் பெயரன் சர்தார் அவர்களை சந்தித்தோம். பல்வேறு விடயங்களை விவாதித்தோம். அதில் ஒன்று மதுரை மாவட்ட ஆட்சியர் ரௌஸ் பீட்டர் (Rous Peter) ஆணைப்படி, தாசில்தார் இசுமாயில் அவர்கள் 1819ஆம் ஆண்டு மீனாட்சியம்மன் கோயிலில் பேச்சியம்மன் மண்டப வாயிலை அலங்கரிக்கும் விளக்கு தோரணத்தை அமைத்து கொடுத்திருக்கிறார். கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஆட்சியர், இசுலாம் மதத்தை சேர்ந்த தாசில்தார் இணைந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு செய்து கொடுத்த விளக்குத் தோரணம் தான் தமிழ்நாட்டின் பண்பாடு. சித்திரைத் திருவிழாவின் ஐந்தாவது நாளில் அம்மன் மாசி வீதிகளில் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வரும்போது ரௌஸ் பீட்டர் (Rous Peter) கொடையாக கொடுத்த தங்க பாதந்தாங்கிகளை அணிந்து உலா வருகிறார். 1819 ஆம் மதுரை ஆட்சியராக ரௌஸ் பீட்டர் உத்தரவின் பெயரில், தாசில்தாராக இருந்த செய்யது இஸ்மாயில் அவர்கள் 1500 செப்பு காசுகள் செலவு செய்து, மதுரை மீனாட்சியம்மன் கோயிலி...