Posts

Showing posts from October, 2024

துணைக்கோள் நகரம் என்னும் துயரம்

மதுரை மாவட்டத்தில், தற்போது பெருகி வரும் வீட்டு வசதித் தேவை யைக், கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையத்திற்கு அருகில் மதுரை திருநெல்வேலி நான்கு வழிப் பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் ஒன்று உருவாக்கப் படும் என 2013 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் விதி எண் 110 இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும். இதில், 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த புதிய துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளான, சாலைகள், குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், மழை நீர் சேகரிப்பு திட்டம் மற்றும் பூங்காக்கள் ஆகியவைகள் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்தத் துணைக்கோள் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வ...

மதுரை அருவிமலை குகைத்தளத்தில் சமணர் கற்படுகைகள் கண்டறியப்பட்டது

Image
மதுரை மாவட்டத்தில் 16 மலைக்குன்றுகளில் இதுவரை சமணர் கற்படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 8 மலைக்குன்றுகள் தமிழ்நாடு தொல்லியல்துறையாலும் 6 மலைக்குன்றுகள் இந்திய தொல்லியல்துறையாலும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை அருவிமலையில் உள்ள குகைத்தளத்தில் 12க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் கொண்ட குகைத்தளம் மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினரால் கடந்த 29.09.2024 அன்று கண்டறியப்பட்டது. அருவிமலையை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (14.10.24) மனு கொடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பால்குடி என்னும் கிராமத்தில் 1.7 கி.மீ நீளமும், சுமார் 170 ஏக்கர் பரப்பளவும் உள்ள அருவிமலை அமைந்துள்ளது. இம்மலையின் உச்சியில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர் மாறவர்மன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலின் அதிட்டான பகுதி, இக்கோயில் அருகேயுள்ள பாறை, கோயில் செல்லும் மலைப்பாதையில் உள்ள படிக்கட்டு, போன்றவற்றில் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன...

நரசிங்கம்பட்டி பெருங்கற்கால சின்னங்களும் பல்லுயிரிய மரபு தளமும்

Image
நரசிங்கம்பட்டி பெருங்கற்கால சின்னங்களை கொண்ட ஈமக்காடு பகுதியை அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் பல்லுயிரிய மரபு தளத்தோடு இணைத்து பல்லுயிரிய மரபு தளத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் ============================= மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்மலை அடிவாரத்தில்  நரசிங்கம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. வனத்துறையின் கீழ் பாதுகாப்பட்ட வனப்பகுதியாக விளங்கும் பெருமாள்மலையின் தெற்குச் சரிவில் நரசிங்கம்பட்டி கிராமமும் வடக்குச் சரிவில் அரிட்டாபட்டி கிராமமும் அமைந்துள்ளது.  நரசிங்கம்பட்டி ஊரில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள், இராமாயண கதைகளை விளக்கும் வண்ண சுவரோவியங்கள் கொண்ட 300 ஆண்டுகள் பழமையான சித்திரச்சாவடி கட்டடம், மலைக்கோயில் திருவிழா, கொண்டைக்கல் கார்த்திகை தீபம், நரசிங்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பூசாரிப்பட்டி  தொன்மையான பாறை ஓவியங்கள் என பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கொண்டுள்ளது நரசிங்கம்பட்டி ஊராட்சி. பெரிய பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்களை அமைத்து மக்கள் வாழ்ந்த காலத்தைப் பெருங்கற்காலம் என வரலாற்று ...