தோழா
------ தோழா ------

ரஜினி பிறந்தநாளுக்கு
ரத்ததான விழா நடத்திய என்னால்
டெங்கு காய்ச்சலின் போது
நிகழ்த்த புத்தியில்லையே தோழா.
அரசியல் தலைவர் நினைவாக
இலவச புத்தகம் வழங்கிய என்னால்
ஏழை குழந்தை ஒன்றுக்கு
ஏட்டு கல்வி கொடுக்க முடியவில்லையே தோழா.
சத்யராஜ் நடிக்கும் வரை எனக்கு
பெரியாரை தெரியாது தோழா...
சாதிகளை சாடி எழுதிய கவிதைக்கு
சன்மானம் வாங்கிய என்னால்
சாகும்வரை சாதியை
ஒழிக்க முடியவில்லை தோழா..
அநீதி எங்கு நடந்தாலும்
அதை வேடிக்கை பார்க்கிறாயா?
அப்படியென்றால்
நீயும் நானும் இந்தியன் என்று
இருந்த எனக்கு
தாடியோடு
என் பழைய சட்டையில்
சிரித்தபடி இருப்பவரின் பெயர்
சேகுவேரா என்று
நீ சொல்லித்தான் தெரியும் தோழா.
வீட்டு காவலுக்கு
நாய் வளர்த்த எனக்கு
உலக பாதுகாப்பை உறுதி செய்ய
மரம் வளர்க்க
தோனுதில்லையே தோழா....
ஓட்டுக்கு ஐநூறு வாங்கிய என்னை
ஊழலுக்கு எதிராக
ஊர்வலம் போக உசுப்புகிறாயே தோழா.
களமிறங்கி போராடும்
நலம்விரும்பிகளே
விடியல் கிடைக்காத
விரக்தியில் இருக்கும்போது
இணையதள முகநூலில்
கருத்து பதிந்து
புரட்சி ஏற்படுமென்ற
புத்தி கெட்ட
புரிதல் எனக்கு உள்ளது தோழா...
காதல் முறிவால்
தற்கொலை செய்ய
தயராய் இருக்கும்
தற்குறி எனக்கு
விவசாயி தற்கொலை ஒன்றும்
பெரிதல்ல தோழா....
இந்திய ஆட்சி பொறுப்பில்
ஐம்பது சதவீதம்
அந்நிய நேரடி தலையீடு
அனுமதிக்கும் மசோதா
நாளை வந்தால் எனகென்ன
அடிமையாய் வாழ்வது
அசிங்கமில்லை தோழா..
தொல்காப்பியம் பெருமை இருந்தென்ன
தொடர்ந்து என்னால்
பிழையின்றி
தமிழ் பேச முடியாது தோழா.
----- தமிழ்தாசன் -----
பொழுது கழிக்க
பூங்கா புறப்படும்
நண்பர்கள் யாரும்
போராட தயாராகயில்லை தோழா...
...
சபரி மலைக்கு
பாதயாத்திரை போன
சகோதரர்கள் யாரும்
பாலியல் வன்கொடுமைக்கெதிராக
பயணம் வர பதறுகிறார்கள் தோழா.....
குமாரிகளை வஞ்சித்து கூத்தடிக்கும்
ஆன்மீகம் நடத்தி
பிழைப்போர் பின்னால்
அணிதிரளும் எனக்கு
ஆணாதிக்ககெதிராக
ஆள் திரட்ட முடியாது தோழா...
அரைகுறை ஆடையோடு
திரையில் ஆடும் பெண்ணை
கண்டும் ரசிக்கும் என்னை
கற்பழிப்புக்கு எதிராக
கண்டனம் அறிவிக்க சொல்லுகிறாயே தோழா..
பூங்கா புறப்படும்
நண்பர்கள் யாரும்
போராட தயாராகயில்லை தோழா...
...
சபரி மலைக்கு
பாதயாத்திரை போன
சகோதரர்கள் யாரும்
பாலியல் வன்கொடுமைக்கெதிராக
பயணம் வர பதறுகிறார்கள் தோழா.....
குமாரிகளை வஞ்சித்து கூத்தடிக்கும்
ஆன்மீகம் நடத்தி
பிழைப்போர் பின்னால்
அணிதிரளும் எனக்கு
ஆணாதிக்ககெதிராக
ஆள் திரட்ட முடியாது தோழா...
அரைகுறை ஆடையோடு
திரையில் ஆடும் பெண்ணை
கண்டும் ரசிக்கும் என்னை
கற்பழிப்புக்கு எதிராக
கண்டனம் அறிவிக்க சொல்லுகிறாயே தோழா..

ரஜினி பிறந்தநாளுக்கு
ரத்ததான விழா நடத்திய என்னால்
டெங்கு காய்ச்சலின் போது
நிகழ்த்த புத்தியில்லையே தோழா.
அரசியல் தலைவர் நினைவாக
இலவச புத்தகம் வழங்கிய என்னால்
ஏழை குழந்தை ஒன்றுக்கு
ஏட்டு கல்வி கொடுக்க முடியவில்லையே தோழா.
சத்யராஜ் நடிக்கும் வரை எனக்கு
பெரியாரை தெரியாது தோழா...
சாதிகளை சாடி எழுதிய கவிதைக்கு
சன்மானம் வாங்கிய என்னால்
சாகும்வரை சாதியை
ஒழிக்க முடியவில்லை தோழா..
அநீதி எங்கு நடந்தாலும்
அதை வேடிக்கை பார்க்கிறாயா?
அப்படியென்றால்
நீயும் நானும் இந்தியன் என்று
இருந்த எனக்கு
தாடியோடு
என் பழைய சட்டையில்
சிரித்தபடி இருப்பவரின் பெயர்
சேகுவேரா என்று
நீ சொல்லித்தான் தெரியும் தோழா.
வீட்டு காவலுக்கு
நாய் வளர்த்த எனக்கு
உலக பாதுகாப்பை உறுதி செய்ய
மரம் வளர்க்க
தோனுதில்லையே தோழா....
ஓட்டுக்கு ஐநூறு வாங்கிய என்னை
ஊழலுக்கு எதிராக
ஊர்வலம் போக உசுப்புகிறாயே தோழா.
களமிறங்கி போராடும்
நலம்விரும்பிகளே
விடியல் கிடைக்காத
விரக்தியில் இருக்கும்போது
இணையதள முகநூலில்
கருத்து பதிந்து
புரட்சி ஏற்படுமென்ற
புத்தி கெட்ட
புரிதல் எனக்கு உள்ளது தோழா...
காதல் முறிவால்
தற்கொலை செய்ய
தயராய் இருக்கும்
தற்குறி எனக்கு
விவசாயி தற்கொலை ஒன்றும்
பெரிதல்ல தோழா....
இந்திய ஆட்சி பொறுப்பில்
ஐம்பது சதவீதம்
அந்நிய நேரடி தலையீடு
அனுமதிக்கும் மசோதா
நாளை வந்தால் எனகென்ன
அடிமையாய் வாழ்வது
அசிங்கமில்லை தோழா..
தொல்காப்பியம் பெருமை இருந்தென்ன
தொடர்ந்து என்னால்
பிழையின்றி
தமிழ் பேச முடியாது தோழா.
----- தமிழ்தாசன் -----
Comments
Post a Comment