திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?
திருப்பரங்குன்றம் மலை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம் மலை. சுமார் 170 ஏக்கர் பரப்பளவும் 3 கி.மீ சுற்றளவும், 1050 அடி உயரமும் கொண்ட அனற்பாறைகளிலான (Igneous Rock) குன்றாகும். அட்சரேகை, தீர்க்கரேகை 9.877188, 78.069965 என்கிற குறியீட்டு அச்சுதூராங்களில் மதுரை நகரில் இருந்து சுமார் கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம் மலை. திருப்பரங்குன்றம் மலையின் வடக்குப்புறத்தில் தென்கால் கண்மாய், வடகிழக்கில் திருக்கூடல் மலை, கிழக்கில் தியாகர்யார் பள்ளி வளாகம், மேற்கில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம், தென்மேற்கில் பானாங்குளம், தெற்கில் செவ்வந்திக்குளம், ஆரியங்குளம் கண்மாய், பறையன்மலை ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. பரம் என்றால் உயர்ந்தது. குன்றம் என்றால் மலை. உயர்ந்தமலை என்னும் பொருளில் திருப்பரங்குன்றம் என்று பெயர் பெற்று இருக்கலாம். புராணங்கள் இம்மலைக்கான வெவ்வேறு காரணங்களை முன் வைக்கின்றனர். முருகப் பெருமானின் படை வீடுகளுள் முதற்படை வீடாக விளங்குவது திருப்பரங்குன்றம...