Posts

Showing posts from November, 2024

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்

Image
தமிழரின் தொன்மை சின்னங்களும்     டங்ஸ்டன் சுரங்கமும்           மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அ. வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர் அதாவது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமம் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை எடுத்து இருக்கிறது. மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. கடந்த 07.11.2024 அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு & ஒழுங்குமுறை சட்டத்தின் (Mines and Minerals Development and Regulation Act 1957) கீழ் நடத்தப்பட்ட நான்காவது ஏலத்தில் மதுரை மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc Limited) நிறுவனம் எடுத்துள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. தமிழ்ந...