Posts

Showing posts from August, 2025

தமிழ்நாட்டு இசுலாமியார்

Image
 மேலகொடுமலூர் முருகன் கோயிலில் இசுலாமிய புலவருக்கு சிலை: பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர் முகம்மது மீர் ஜவ்வாது புலவர். இவர் முகைதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, ராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை மாற்றுகள், குமரையா பதிகங்களைப் பாடியுள்ளார். மேலும் ரகுநாத சேதுபதி, பிரம்பூர் ஆனந்த ரங்கதுரை, முத்துகிருஷ்ணன், கச்சி செல்லப்பன் உள்ளிட்ட வள்ளல்களையும் பாடிச் சிறப்பு செய்துள்ளார். ஜவ்வாது புலவரின் முகைதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ் இன்றளவும் தமிழக முஸ்லிம் களின் தாலாட்டுப் பாடல்களாக வாய்மொழியாகப் பாடப்பட்டு வருகின்றன. பழமையான மேலக்கொடுமலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது இசுலாமியரான ஜவ்வாது புலவரை கவுரவிக்கும் விதமாக அவர் பாடிய குமரையா பதிகத்தை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதியில் ஜவ்வாது புலவரின் உருவத்தைச் சுதை வடிவில் கோயில் நிர்வாகம் அமைத்தது.  ஆதாரம்: இந்து தமிழ் நாளிதழ் 22.10.2016 https://ww...