வண்டியூர் கண்மாய் என்னும் பல்லுயிரிய பண்பாட்டு ஈரநிலம்

வண்டியூர் கண்மாய் என்னும் பல்லுயிரிய பெருக்கமுள்ள பண்பாட்டு ஈரநிலம் --------------------------------------------------------------- ஈரநிலங்கள் (Wetlands): சதுப்புநிலங்கள், ஈரமான புல்வெளிகள், கழிமுகங்கள், அலையாத்திக்காடுகள், உப்பளங்கள், பவளப்பாறைகள், டெல்டாக்கள், ஆறுகள் மற்றும் அவற்றின் வெள்ளச் சமவெளிகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், நெல்-வயல்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் ஆகியவை ஈரநிலங்கள் ஆகும். இயற்கையாக அமைந்த ஈரநிலங்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் அனைத்தும் ஈரநிலங்களில் அடங்கும். நிலவாழ் சூழல் மண்டலத்திற்கும் நீர்வாழ் சூழல் மண்டலத்திற்கும் இடையே அமைந்துள்ள ஈரநிலங்கள் இயற்கை சுத்திகரிப்பு நிலையங்களாக விளங்குகின்றன. உலகில் மொத்தம் 6 சதவீதமே ஈரநிலங்கள் உள்ளன. ஆனாலும் உலகில் 40 சதவீத உயிரினங்களுக்கு வாழிடமாக ஈரநிலங்கள் விளங்குகின்றன. வெள்ளப்பெருக்கின் போது நுரைப்பஞ்சு போல செயல்பட்டு அதிகப்படியான வெள்ளநீரை உறிஞ்சி பாதிப்பை குறைப்பதில் ஈரநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 50 ஆண்டுகளில் 35 சதவீத...