Posts

Showing posts from March, 2017

நீர்வளம் மீட்பென்பது குளத்தில் குப்பை அகற்றும் பணியல்ல

Image
நம் வீட்டுகளுக்கு யார் வந்தாலும் முதல் உபசரிப்பாக ஒரு குவளை நீரைக் கொடுப்போம். ஆனால் இன்று அந்த பண்பாடு தமிழக வீடுகளில் அற்றுப் போயிருக்கிறது. ஆதியில் வேட்டையாடி ஓடித் திரிந்த நம்மை பண்பட்ட உலகின் மூத்தகுடி சமூகமாக வளர்த்தது தமிழக ஆறுகள்தான். தாய்ப் போன்ற அந்த ஆறுகளுக்கு நாம் இன்று செய்து கொண்டிருக்கும் நன்றிக்கடன் என்னவென்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகில் எல்லா ஆறுகளும் பண்பட்ட சமூதாயங்களையும் நாகரிகங்களையும் உருவாக்கிடவில்லை. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உணவு உற்பத்தியில் மனிதன் ஈடுபடுவதற்குச் சில சாதகமான இயற்கைச் சூழல் தேவை.  அதனால் தான் நீர்வளம் மிகுந்த அமேசான், மிசிசிபி, கங்கை போன்ற ஆற்றங்கரை  பகுதியில் கி.மு. 1000 ஆண்டில்தான் வேளாண்மை தொடங்கியது. தமிழர்களின் வேளாண்மை பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது. ஆற்றில் குளித்து, குடித்து, ஆற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்து, ஆற்றில் துணி துவைத்து, இக்கரையில் இருந்து அக்கரை செல்ல ஆற்றில் இறங்கி கடந்து சென்ற தலைமுறைகள் இப்போது ஓய்வு நாற்காலியில் சாய்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறன்...

கிழக்கை காட்டிய அந்த கிழவனை

உன்னைப் போல நானும் ஓர் மாணவன்தான் பச்சை துண்டு போர்த்திய அந்த வெறுமுடம்பு வெண்தாடி கிழவனுக்கு பள்ளியும் பயிற்றுனரும் ஒன்றுதான் எனினும் வகுப்பறை வேறு வேறு இடும்பில் வேட்டியை இறுக்கி கட்டிக் கொண்டு அவனெடுத்த இயற்கை வழி வேளாண்மை பாடத்தை நீயும் மீசை முனையை முறுக்கிக் கொண்டு அவனெடுத்த மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தை நானும் கற்றுக் கொண்டோம். பச்சை புரட்சிக்கு எதிரான அவனின் கருத்தை நீ பாரம்பரிய வேளாண் முறை மீட்பு என்பாய் நான் அதை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பேன் அவரை நீ அழிந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க அலைந்து திரிந்தவர் என்பாய் உதிரியாக கிடந்த உழைக்கும் மக்களை வர்க்கமாக திரட்ட ஓயாது ஓடியவரென்பேன் நான் இயற்கை வேளாண்மையின் அரசியலை நானும் தொழில்நுட்பத்தை நீயும் மக்களிடம் கொண்டு போனோம். உழவர்கள் தற்கொலை செய்து கொண்டால் உடனடியாக நன்கொடை திரட்டி இறந்த உழவனின் இல்லம் சேர்ப்பாய் உழவன் தற்கொலைக்கு காரணமான உலகமய கொள்கையை கொண்டிருக்கும் அரசுக்கு எதிரான போரட்டத்தில் பங்கேற்ப்பேன் நான் நட்டஈடும் உரிமையும் நன்கொடையைப் போல எளிதில் கிடைப்பதில்லை என் ...